get paid to paste

இருபது ஆண்டுகாலமாக பேசிக்கொண்டும் எழுதிக்-கொண்டும் வரும் எஸ்.ராமகிருஷ்ணன் காவல் கோட்டம் குறித்து எழுதியதில் விவாதிப்பதற்கு ஒன்றுமீல்லையா?

***
எஸ்.ராவின் விமர்சனம்:

சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னை காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.

நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது. சரித்திரத்தினை எப்படி உள்வாங்கியிருக்கிறோம். எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே.  முன்பு எழுதப்பட்ட  சரித்திர குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.

வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள்  சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணகாப்பக தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கபட்டதும் தவிர்க்கபட்டதையும் வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள்.  

ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்க துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.

***

ஒன்றுமே இல்லை என்று புறந்தள்ள நான் ராமகிருஷ்ணன் அல்ல. விவாதிப்பதற்கு அல்லது பொருட்படுத்துவதற்கு ஏதாவது உள்ளதா என்ற அக்கறையுடன்தான் நான் வாசித்தேன். இரண்டு விஷயங்கள் விவாதிப்பதற்கானதாக எனக்குப்பட்டது.

ஒன்று, ஒரு வரலாற்றுநாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர் ஒரு மாதிரியை முன்வைக்கிறார். இது போல காவல்கோட்டம் இல்லையே என்று கேள்வியெழுப்புகிறார். அதுபோல காவல்கோட்டம் ஏன் இருக்கவேண்டும். ஒரு வரலாற்று நாவலை நூறுவிதத்திலும் எழுதலாம். அதற்கு என்ன அளவுகோல்? யார் அதை தீர்மானிப்பது. போரும் வாழ்வும் போலவும், அக்கினி நதியைப் போலவும்தான் வரலாற்று நாவல் இருக்கவேண்டுமென்பது எந்த மகாசபையில் முடிவுசெய்யப்பட்டது. நெப்போலியனை டால்ஸ்டாய் பார்த்தவிதமும், விக்டர் ஹ¤யூகோ பார்த்தவிதமும் ஒன்றா? போரும் வாழ்வும் நாவலில் வரலாறு கையாளப்பட்ட விதமும், சக்கரவர்த்தி ப¦ட்டர் நாவலில் வரலாறு கையாளப்பட்டவிதமும் ஒன்றா? வரலாற்றை புனைவு தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடும் ஆற்றல் கொண்டது. விளையாட்டின் வகைகள், உத்திகள், நுட்பங்கள், சாகசங்கள் எல்லாம் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரே களம், ஒரே அணுகுமுறை, ஒரே உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலான விளையாட்டுகளும் உண்டு. ஆனால் அது களத்தில் விளையாடுவதல்ல, கணினியில் விளையாடுவது. ராமகிருஷ்ணன் இரண்டாம் வகையை வைத்து முதல் வகையின் மீது கேள்வியெழுப்பியுள்ளார்.

விவாதிப்பதற்கான இரண்டாவது விஷயம் மீக நுட்பமானது ஒரு நாவலாசிரியனின் நண்பன் நாவல் எழுதிவிட்டால் நாவலாசிரியனாக கருதப்பட்ட-வனின் மனநிலை என்னவாகிறது என்பதைப்பற்றியது. இந்த ஆய்வுக்கு ஒரு பரிசோதனை எலியாகத்தான் அவர் எழுதியுள்ள கட்டுரை உள்ளது. அது பட்டிருக்கிற பாடு, அடைந்திருக்கிற அவஸ்தை, தாங்கிக்கொள்ள முடியாமல் மேலும் கீழும் குதித்து பல்லில் சிக்கியதை எல்லாம் கடித்து துப்பியிருப்பது என இவை எல்லாவற்றையும் வைத்து அந்த மனநிலையை ஆய்வுசெய்ய முடியும். ஜாடிக்குள் கூழாங்கல்லைப் போட்டவுடன் உள்ளே இருக்கும் திரவம் மேலேறி வருவதைப்போல எழுத்தாளனின் மனதுக்குள் இருக்கும் வக்கிரமும், காழ்ப்பும், குரோதமும் மேலேறி வர அருகில் இருப்பவன் ஒரு படைப்பை போடவேண்டியுள்ளது. இவ்விடத்தில் படைப்பு படைப்பாளியாக அறியப்பட்டவரிடம் என்னவாக வினையாற்றுகிறது என்பது முக்கியம். அத்தகையதொரு ஆய்வும், அதன் மீதான விவாதமும், தமீழ் இலக்கிய உலகுக்கு மீகவும் பயன்படும்.

http://www.keetru.com/puthakam/may09/su_venkatesan.php
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=231&page=

Pasted: May 19, 2009, 4:38:55 pm
Views: 133